நாமக்கல்லில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் நேற்று முந்தின  மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டார். இதனையடுத்து அந்த மாணவிக்கு திடீரென்று  காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அச்சிறுமி பரிதாபமாக  உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் எதிரொலியாக  தமிழகம் முழுவதும், உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

எக்காரணம் கொண்டும்  ஹோட்டல்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் மீதமான உணவுகளை இருப்பு வைத்து விற்க கூடாது எனவும் அதிகாரிகள் உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்