காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்றபோது டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கி காயமடைந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அக்.3 வரை TTF வாசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில்,  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வெளிநாட்டு ஹெல்மெட்டை அனுமதியின்றி பயன்படுத்தியதாக டிடிஎஃப் வாசன் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ISI முத்திரை இல்லாத அனுமதிக்கப்படாத ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஹெல்மெட்டை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய புகார் எழுந்துள்ளது. ISI அனுமதி சான்று பெறாத ஹெல்மெட்டை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது