திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 525 வாக்குறுதிகளை கொடுத்தது எனவும் அதில் 10% அறிவிப்பை கூட முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவல்லை எனவும் அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததோடு ஒரு காலிப்பாக்கெட்டை காண்பித்து திமுக உருட்டுக்கடை அல்வா என்று விமர்சித்தார்.
இதற்கு தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அல்வாவால் தான் இன்று அதிமுக பல கோணங்களில் பிரிந்து.
அவர் கொடுத்த அல்வாவால்தான் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து சென்று இன்று எதிர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அல்வாவும் உணவுதான். தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார் என்றார்.
