அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை இன்று (நவ. 26) ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நாளை (நவ. 27) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் சென்னை வந்துள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் தவெகவில் இணைவது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது இந்தச் செய்திகளை உறுதிப்படுத்துவதுபோல் உள்ளது.
செங்கோட்டையனின் இந்த முக்கிய அரசியல் நகர்வு உறுதியாகியுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலரும் சென்னைக்கு விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காகக் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனின் இந்த அதிரடி முடிவும், நாளை அவர் தவெகவில் இணையும் நிகழ்வும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
