
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. மனிதர்களைப் போலவே பாசத்திலும் செயல்களிலும் தனித்துவமாக இருக்கும் விலங்கு என்றால் அது கொரில்லா தான்.
பல இடங்களில் மனிதர்களைப் போலவே தனது குட்டிகளுக்கு பாசம் காட்டி பலரையும் வெகுவாக கவரும். தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் கொரில்லா ஒன்று ஒரு நபரிடம் தனது தண்ணீர் கொடுப்பதற்கு செய்கை மூலம் கேட்டுள்ளது. அந்த நபர் தன்னுடைய கையினால் தண்ணீர் கொடுத்து முடித்துள்ளார். ஆனால் இறுதி வரை அவரை விடாமல் கொரில்லா அவரது கையில் எச்சில் பட்டு விட்டதா என பார்த்து அதனை கழுவி விடும் காட்சி தற்போது வெளியாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
எத்தனை அன்பு
அவர் கையில் தண்ணீரை பருகி விட்டு பருகி முடிந்த உடன் அவர் கையை கழுவி விடுவது
வியக்க வைக்கும் செயல்
💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜 pic.twitter.com/WayHoWjLyt— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) July 23, 2023