இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மின்கட்டணம் தொடர்பாக மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி நடப்பதாக மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின் கட்டணம் நிறுவைத்தொகை இருப்பதாகவும் உடனே கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி மோசடி நடைபெற்று வருகின்றது. சந்தேகிக்கும் படி மெசேஜ் வந்தால் சைபர் கிரைமுக்கு 1930 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் otp மற்றும் சி வி வி எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என்று மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.