விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

கடந்த தேர்தலில் திமுக தொண்டர்களின் ரத்தமும் வியர்வையும் தான் விசிக-வின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியை மிகச் சாமர்த்தியமாகக் தவெக-வின் பக்கம் திருப்பிவிட்டுவிட்டு, உழைப்பைப் பற்றிப் பேசிக் ‘கதாகாலட்சேபம்’ செய்ய வேண்டாம் என்று சாடியுள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன்பாகத் தவெக வெற்றிபெறுமா என்ற ஐயப்பாட்டினால் திமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்டு, தற்பொழுது தவெக தேர்தலில் வென்ற பிறகு மந்திரி பதவிகளுக்காக அவர்களுடன்  கைகோர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

விசிகவினர் உழைக்கவில்லை என்று திருமாவளவன் முன்பு கூறியதை நினைவு கூர்ந்துள்ள சரவணன் அண்ணாதுரை, ‘மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ள அரசியல் ரீதியிலான இந்தக் காட்டமான பதிவு, தற்பொழுது தவெக-விசிக மற்றும் திமுக கூட்டணி வட்டாரங்களில் பெரும் ‘விவாதப் பொருளாக மாறியுள்ளது.

“>