திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அவதூறான முறையில் விமர்சித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தவெகவினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், இரு கட்சிகளிடையே தேவையற்ற அரசியல் பதற்றத்தையும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் வன்மத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகச் சென்று, அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனுவை அளித்துள்ளதால் இப்பகுதியில் பலத்த அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரை தரக்குறைவாக பேசி வரும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தமிழக வெற்றி கழகத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்#TVK | #DMK | #AnithaRadhakrishnan | #DSPOffice | #Complaint pic.twitter.com/M2lF9UPGcP
— PttvOnlinenews (@PttvNewsX) May 20, 2026
“>
