அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மையமாக வைத்து போர் மேகங்கள் மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் இந்த முக்கிய கடல்வழிப் பாதையை முற்றுகையிட்டுள்ளதால், உலக நாடுகளுக்கான எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சீனாவின் தலையீடு நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. ஈரானுடனான தங்களது வர்த்தக மற்றும் எரிசக்தி உறவுகளில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் அத்துமீறலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததும், இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதல்களும் ஈரானை மேலும் ஆவேசமடையச் செய்துள்ளன. அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் சீனாவின் நேரடி எச்சரிக்கை காரணமாக, ஹார்முஸ் வளைகுடா பகுதி எந்த நேரத்திலும் ஒரு மிகப்பெரிய உலகப் போருக்கான களமாக மாறக்கூடும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.