சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் ஹைவேயில் ஸ்கேட்போர்ட் ஓட்டும் இளைஞர் ஒருவர், ஸ்டண்ட் செய்வதாகக் கூறி அபாயகரமான செயலில் ஈடுபட்ட வீடியோ வைரல் ஆனது.

வீடியோவில், சாலையின் நடுவே ஸ்கேட்போர்டில் ஓடிய இளைஞர், எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விடுகிறார். மோட்டார் சைக்கிளின் முன்சக்கரம் நேராக அந்த இளைஞரின் கழுத்தில் மோதியதால் அவர் தூக்கி வீசப்பட்டார். அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Raj Raj Gupta (@razz_gupta_1679)

இந்தக்  வீடியோ, “razz_gupta_1679” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். “இவனுக்கு உயிர் மதிப்பே இல்லை”, “மனநிலை சரியில்லை போல இருக்குது, இப்போ உடலும் சரியில்லை” என சமூக வலைதளங்களில் பதிவுகள் பதிவாகின்றன.

பொது சாலைகளில் உயிரைக் கேலி செய்யும் வகையில் ஸ்டண்ட் செய்யும் நபர்களுக்கு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலரும் முன்வைத்துள்ளனர்.