சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி ஆறாவது தெருவில் ராம்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சலூன் கடை நடத்துகிறார். கடந்த 31-ஆம் தேதி முனுசாமி (36)என்பவர் ராம்பாலிடம் சென்று தனது தந்தைக்கு மொட்டை போட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ராம்பால் முனுசாமியுடன் சென்றுள்ளார். அப்போது கொடுங்கையூர் ஜம்புலி தெருவில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று முனுசாமி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

ராம்பால் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறினார். இதனால் கூகுள் பே மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அபேஸ் செய்துவிட்டு முனுசாமி தப்பி சென்றார். இதுகுறித்து ராம்பால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்ய போலீசார் முனுசாமியை கைது செய்தனர்.