
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை வெற்றிகரமாக இந்தியா முறியடித்ததோடு அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதலும் மேற்கொண்டது.
நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தான நிலையில் இன்று இந்திய முப்படை தளபதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராணுவ தலைமை இயக்குனர் கர்னல் ராஜீவ் கய் அவர்களிடம் நிருபர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று கேட்டார். அதற்கு அவர் 35 முதல் 40 ராணுவ வீரர்கள் மரணமடைந்திருக்கலாம்.
ஆப்ரேஷன் சிந்துர் தொடங்கிய பிறகு இந்திய ராணுவ கட்டமைப்புகள் மீது பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. எங்களுடைய இலக்குகள் என்பது தீவிரவாத முகாம்களை சார்ந்ததாக இருந்தது. இதற்குப் பிறகு அவர்கள் இந்திய ராணுவ தளங்கள் மீது குறி வைத்ததால் நம்முடைய தாக்குதலும் பெரிய அளவில் இருந்தது. நாம் பெரிய ஆயுதங்களை பயன்படுத்தியதால் அவர்களின் தரப்பில் கண்டிப்பாக இழப்பு இருக்கும். அது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது.
எத்தனை பேர் இறந்தனர் எத்தனை பேர் காயமடைந்தனர். எங்களுடைய இலக்கு என்பது உயிரிழப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது கிடையாது. ஆனால் அது நடந்திருக்கும் என்பதால் அதனை என்ன வேண்டியது அவர்களுடைய விஷயம். எங்களுடைய இலக்கு என்பது தாக்குவது மட்டும்தான். மேலும் உடல்களை எண்ணுவது கிடையாது என்று அதிரடியாக பதில் வழங்கினார். மேலும் இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் இழந்ததாகவும் கூறியிருந்தார்.