பாலிவுட் நடிகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தங்கள் குடும்பத்தில் சமூக ஊடகத்தில் இனிமையான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கர்ப்பம் பற்றி அறிவித்திருந்த இந்த பிரபல ஜோடி, ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கொரு மாதம் முன்பாகவே, தங்களது முதல்மகளாக அழகான பெண் குழந்தையை வரவேற்றுள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>பிப்ரவரி 2023ல் ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, ‘ஷெர்ஷா’ திரைப்படம் மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தனர். சித்தார்த், இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவாகவும், கியாரா அவரது காதலியாகவும் நடித்திருந்தனர். திரையில் உருவான காதல் கதையே பின்னர் நிஜ வாழ்க்கையிலும் மலர்ந்து, திருமணமாக மாறியது. இப்போது, அந்த காதலின் பலனாக அவர்கள் பெற்றோராகும் பொழுதில், ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் நிலவுகிறது.
வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு செல்வதோடு, தொழில்முறையிலும் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கியாரா அத்வானி, ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடித்துள்ள ‘வார் 2’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியிடப்படுகிறது.
அதே நேரத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூருடன் இணைந்து நடித்துள்ள காதல் நகைச்சுவை படம் ‘பரம் சுந்தரி’ ஆகஸ்ட் 29 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோராகும் சந்தோஷத்தில் மாறிய இந்த ஜோடியின் மகளின் முதல் புகைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
