இந்தியாவிற்கு எதிராக எப்போதுமே கை கோர்த்து நிற்கும் சீனா – பாகிஸ்தான் உறவில் தற்போது ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.
அரபிக்கடலில் உள்ள தனது குவாடர் (Gwadar) துறைமுகத்தை சீனாவின் நிரந்தர ராணுவ தளமாக மாற்றிக்கொள்ள பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கு கைமாறாக பாகிஸ்தான் கேட்ட ஒரு விஷயம் சீனாவையே அதிர வைத்துள்ளது. “இந்தியாவிடம் இருப்பதை போல, கடலுக்கு அடியில் இருந்து அணு ஏவுகணைகளைத் தாக்கும் (Sea-based nuclear second strike) நவீன தொழில்நுட்பத்தை எங்களுக்குத் தர வேண்டும்” என்பதே பாகிஸ்தானின் அந்த கோரிக்கை.
இந்த தொழில்நுட்பம் கிடைத்தால் இந்தியாவுக்கு இணையாக அணுசக்தி பலம் பெற்றுவிடலாம் என பாகிஸ்தான் கணக்கு போட்டது. ஆனால், சர்வதேச அணுசக்தி விதிகளை மீற விரும்பாத சீனா, “இது ரொம்ப ஓவர்” எனக்கூறி பாகிஸ்தானின் கோரிக்கையைத் தாரை வார்த்துவிட்டது.
இந்தியாவின் பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பாகிஸ்தான் தவிப்பதும், அதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதும் இப்போது உலக அளவில் விவாதமாகியுள்ளது.
