
சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் வண்டி எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி கோவையில் இருந்து அசாம் மாநிலம் சில்சார் செல்லக்கூடிய வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயிலின் வண்டி எண் 15675 என்றும், சில்சாரில் இருந்து கோவை வரும் ரயிலின் வண்டி எண் 15676 என்றும் மாற்றப்பட்டுள்ளது.
அதனைப் போலவே கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் வண்டி எண் 15905 என்றும், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ரயிலின் வண்டி எண் 15906 என்றும் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.