நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யா சென்ற நடிகர் விஜய் இன்று (ஏப்ரல் 19) தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக நேற்று இரவு சென்னை வந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருப்பு – சிவப்பு வண்ணம் கொண்ட சைக்கிளில் வாக்கு செலுத்த வந்தார். தற்போது அவர், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியபின், முதல்முறையாக வாக்கு செலுத்த உள்ளார். இதனால், அவர் எந்தமாதிரியான குறியீடு உடன் வருவார், தனது கட்சி கொடியின் வண்ணத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவாரா என நெட்டிசன்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.