உள்நாட்டு ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்து வேலை என்ற கொள்கை முடிவுக்கு வந்தது என அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து படிப்படியாக தனது ஊழியர்களை அலுவலகங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறது இன்ஃபோசிஸ் நிறுவனம். அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தனது ஊழியர்களை அவர்களது அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வாரத்தில் 5 நாட்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்தில் இருந்து வேலை  செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.