தேர்தலில் மற்ற கட்சியினர் பல கோடி ரூபாய் செலவு செய்த நிலையில், தவெக வேட்பாளர்கள் வெறும் 75 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து எம்.எல்.ஏ-க்களாக வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் என்.ஆனந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தவெக-வில் மட்டுமே இந்த அதிசயம் சாத்தியமாகி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாங்கள் கோடிகளை கொட்டி செலவு செய்து ஜெயிக்காததால், லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் தங்களுக்கு எழவில்லை என்றும், மக்கள் பணத்தில் கை வைக்க மாட்டோம் என்றும் அதிரடியாகப் பேசியுள்ளார்.

​மேலும், தவெக ஆட்சியில் நேர்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் என்பதை உறுதி செய்த அமைச்சர் ஆனந்த், “நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம், அப்படி மீறி யாராவது ஊழல் செய்தால் அடுத்த நிமிடம் அந்தப் பதவியில் இருந்து தலைவர் எங்களை தூக்கி எறிந்துவிடுவார்” எனத் தலைவர் கொடுத்த கடுமையான உத்தரவை மேடையில் போட்டுடைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.