உத்திரபிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் பெற்ற மகளை தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கசாப்பு கடை நடத்தி வரும் சமன் சிங் என்ற நபர் தனது 16 வயது மகளை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய் வெளியூர் சென்று இருந்த நேரத்தில் மகள் தந்தையுடன் தனியாக தங்கி உள்ளார்.
இந்த நிலையில் தந்தை தனது 16 வயது மகளை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறிய நிலையில் கணவர் மீது காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளியை கைது செய்த நிலையில் சிறுமியை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
