நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து 7 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஊட்டி 7-ஆம் மைல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து சிறுவன் மீது விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.