புனே நகரில் வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்படும் பன்னீர் சாண்ட்விச் குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தெருவோரக் கடைக்காரரிடம் “பன்னீர் விலை அதிகமாக இருக்கும்போது, எப்படி உங்களால் இவ்வளவு மலிவாக விற்க முடிகிறது?” என்று கேட்கிறார்.

அதற்கு அந்த வியாபாரி, “இது பாலில் செய்த உண்மையான பன்னீர் இல்லை” என்று சாதாரணமாகப் பதிலளித்துள்ளார். இது ‘அனலாக் பன்னீர்’ என்று அழைக்கப்படுவதாகவும், இது பால் கொழுப்புக்குப் பதிலாக பாமாயில், மாவுச்சத்து மற்றும் ரசாயனங்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படுவதாகவும் அந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

இத்தகைய போலி பன்னீரில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் ரசாயனங்கள் இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நொய்டாவில் சுமார் 550 கிலோ போலி பன்னீர் பறிமுதல் செய்யப்பட்டதையும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பன்னீர் மாதிரிகளில் பல பாதுகாப்பற்றவை எனத் தெரிந்ததையும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“>

 

பன்னீர் சாண்ட்விச் வாங்கும்போது அதன் விலை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் குறைவாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே பன்னீர் தயாரிப்பதே சிறந்தது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.