சமீபத்தில் இணையதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ, நுகர்வோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீல் வைக்கப்பட்ட குளிர்பான பாட்டிலுக்குள் செத்த பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் ஒரு முன்னணி பிராண்டின் தயாரிப்பிலேயே இத்தகைய அசுத்தம் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“>

இந்நிலையில் ‘ “இது மிகவும் அருவருப்பானது” மற்றும் “உயிருக்கே ஆபத்தானது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பலமுறை குளிர்பானங்களில் அசுத்தங்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் புகழ்பெற்ற குளிர்பான நிறுவனங்களின் தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றின் தூய்மைத் தரம் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.