இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்து சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் போலி coupon code பரப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவகங்கள் தள்ளுபடி தருவதாக கூறி வாட்ஸப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலி கிப்ட் மற்றும் கூப்பன் கோடுகள் பரப்பி சிலர் பண மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாட்சப் குழுக்களில் இத்தகைய மெசேஜ் ஏதாவது வந்தால் மக்கள் அதனை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் எனவும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.