
லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் நடாலி அரோயா என்ற 33 வயது பெண் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் பள்ளியில் படிக்கும் ஒரு 15 வயது சிறுவனுக்கு தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். அதனை அனுப்பிய ஆசிரியை தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மாணவனுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
அந்த ஆசிரியை உள்ளாடைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அனுப்பியதோடு தன்னுடைய அந்தரங்க உறுப்பையும் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். அதோடு அந்த மாணவனிடமும் அந்தரங்க உறுப்பை போட்டோ எடுத்து அனுப்புமாறு கேட்டுள்ளார். இதைப் பற்றி அறியாத சிறுவன் ஆசிரியை கூறியவைகளை வேறொருவருடன் பகிர்ந்துள்ளார். அப்போதுதான் உண்மை வெளியே தெரிந்த நிலையில் ஆசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்டது. முதலில் ஆசிரியை தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் பின்னர் ஒப்புக்கொண்டார். மேலும் இதைத் தொடர்ந்து ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.