திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அதிக அளவு நஞ்சை தரிசில் பயிர் வகை இந்த வருடம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ஆர்வமுடன் நஞ்சை தரிசில் பயிறு வகை விதைப்பு செய்து வருகின்றனர். பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து பயிறு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் உளுந்து பயிர் சாகுபடி செய்வதற்கு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உளுந்து பயிறு வகைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, எந்திரம் மூலம் அறுவடை பணி நடைபெறுவதன் காரணமாக உளுந்து பயிருக்கு தேவையான ஈரப்பதம் மண்ணில் இல்லாமல் இருக்கிறது. மேலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதால் பயிறு சேதபடுகிறது. இதன் காரணமாக உளுந்து பயறு தெளிப்பதை விவசாயிகள் நிறுத்தியுள்ளனர். அதனால் கால்நடைகளை கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதற்கு அரசு கால்நடை படிகள் திறக்க வேண்டும். அப்போதுதான் உளுந்து பயறு சாகுபடி தஞ்சை தரிசில் அதிக அளவு நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விளங்குடி கிராமத்தில் நடைபெற்ற முனைப்பு இயக்க கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி வேளாண்மை இயக்குனர் சாமிநாதன் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் கூறியதாவது, விவசாயிகள் தங்களது உளுந்து பயிர் காப்பீடு வருகிற 15-ஆம் தேதிக்குள் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஊராட்சித் துணைத் தலைவர் வடிவேலு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.