உலக வங்கி தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு முடிவதற்குள் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார். அதில், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி சூழலில் உலக வங்கியை அஜய் பங்கா திறன்பட வழிநடுத்துவார் என நம்புவதாக குறிப்பிட்டார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். 30 ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் நிதி தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்பில் இவர் இருந்திருக்கிறார்.