கனடாவைச் சேர்ந்த தொழில்நுட்ப செல்வாக்காளர் காலேப் ஃபிரீசன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்திறங்கியது தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த முடிவுகளில் ஒன்று எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட காணொளியில், வெளிநாட்டுப் பயண ஆர்வலர்கள் பெரும்பாலும் இந்தியாவின் நெரிசலான மற்றும் பின்தங்கிய பகுதிகளை மட்டுமே காட்டி எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் 1990-களுக்குப் பிறகு இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உலக நாடுகள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ஸ்டார்ட்அப் கலாச்சாரம், நவீன விமான நிலையங்கள், விரைவுச் சாலைகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை போன்றவை நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக ஃபிரீசன் விளக்குகிறார்.

“>

இது ஒவ்வொரு முறை இந்தியாவைப் பார்க்கும்போதும் புதிய மாற்றங்களைக் காண முடிவதாகவும், உலக நாடுகள் உணர்ந்து கொள்வதற்கு முன்பே இந்தியா மிக வேகமாக உருமாறி வருவதாகவும் அவர் கூறுகிறார். வெறும் சவால்களை மட்டும் பார்க்காமல், இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டும் என்பதே அவரது கருத்தாக உள்ளது. இது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.