ஈரான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் முற்றுகைக்கு உள்ளாக்கப்படும் என்றும், இதனால் வணிக ரீதியாகச் செல்லும் கப்பல்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அந்தப் பதிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானை நிலைகுலையச் செய்ய அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பையும் வர்த்தக ரீதியான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.