அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை அந்நாட்டு நீதித்துறை வெளியிட்டது உலக அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த ஆவணங்களில் பில்கேட்ஸ் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தலைவர் போர்ஜ் பிரெண்டே, எப்ஸ்டீனுடன் தனக்கு இருந்த தொடர்புகள் வெளிவந்ததையடுத்து தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
தனது செயலால் உலகப் பொருளாதார மன்றத்தின் கௌரவம் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க விரும்பாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உயர்மட்டப் பிரபலங்கள் பலரின் முகத்திரையைக் கிழிக்கும் இந்த ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’, சர்வதேச அரசியலிலும் பொருளாதார வட்டாரத்திலும் இன்னும் பல மாற்றங்களையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
