உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில்  இனிப்பு கடை ஒன்றில் விலை உயர்ந்த ஒரு இனிப்பு வகை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.   அதாவது லக்னோவை சேர்ந்த “சப்பன் போக்” என்ற கடையில் தான் இந்த இனிப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்பின் பெயர் “எக்ஸோடிகா”. இந்த இனிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் மற்றும் உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மேலும் இந்த இனிப்பு வகை 24 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்வீட் பாக்ஸ் விலை ரூ.50 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 100 ஸ்வீட்கள் இருக்குமாம்