இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமேAI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு நிலநடுக்கத்தைக் கண்டறியும் அல்காரிதத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளனர். இது ஒரு வாரத்திற்கு முன்பே நிலநடுக்க மண்டலத்தை அடையாளம் கண்டுள்ளது. 321KMS தொலைவில் நிலநடுக்கத்தின் அளவை AI அமைப்பு கணித்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன் துல்லியத்தை மேம்படுத்த, இத்தாலி, ஜப்பான் மற்றும் கிரீன்லாந்து போன்ற அதிக நில அதிர்வு திறன் உள்ள பகுதிகளில் சோதனைகள் நடத்தப்படும்.