கோடை காலம் என்றவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது மாம்பழம் தான். பழங்களின் அரசன் என அழைக்கப்படும் மாம்பழங்கள் சுவை மிகுந்தவை என்பது மட்டுமல்லாமல் ராயல் தன்மையும் கொண்டவை. உலகில் பாதி மாம்பழங்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதாவது இந்தியாவில் மட்டும் சுமார் 280 வகை மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் உலகிலேயே விலை உயர்ந்த ஐந்து மாம்பழ வகைகளையும் அவற்றின் விலையை பற்றி இதில் பார்க்கலாம்.

மியாசாகி மாம்பழம்:

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் தான் இது. இந்த வகை மாம்பழங்கள் taiyo no tamago எனப்படுகின்றன. ஜப்பானில் உள்ள மியாசாகி பகுதியில் இந்த மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாம்பழங்களின் விலை கிலோ சுமார் மூன்று லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

கோஹிதூர் மாம்பழம்:

இந்த வகை மாம்பழங்கள் மேற்குவங்க மாநிலத்தில் முர்ஷிதா பாத் என்ற பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரே ஒரு மாம்பழத்தின் விலை சுமார் 1500 ரூபாய் வரை உள்ளது.

டாப் எண்ட் மாம்பழம்:

ஆஸ்திரேலிய நாட்டில் டாப் எண்ட் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்கள் காஸ்ட்லியான ரகம் கிடையாது. ஆனால் ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்பனையான மாம்பழம் என்ற கின்னஸ் சாதனையை இந்த மாம்பழம் படைத்துள்ளது. அதாவது 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இந்த மாம்பழங்கள் 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன

நூர்ஜகான் மாம்பழம்:

இந்த வகை மாம்பழங்கள் மத்திய பிரதேசம் மாநிலம் அல்லிராஜ்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரே ஒரு மாம்பழத்தின் விலை கிட்டத்தட்ட 1000 ரூபாயும் ஆகும். இவை அதிக எடை கொண்டவை மட்டுமல்லாமல் இனிப்பு சுவையும் மிகுந்தவை.

அல்போன்சா மாம்பழம்:

இந்தியாவில் மிகப் பிரபலமான அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இந்த வகை மாம்பழங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலை 3000 ரூபாய் ஆகும்.