இஸ்ரேல் காசா மீது கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனான் மீதும் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ‌(62) கடந்த புதன்கிழமை என்று ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு நிச்சயம் பலி வாங்குவோம் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அலிபாகரி கனி தற்போது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு பகுதி மட்டுமின்றி உலகிற்கு பெரும் ஆபத்து என்று கூறியுள்ளார். கடந்த 10 மாதங்களில் இஸ்ரேல் காசா மீது பெரும் அழிவை ஏற்படுத்திய நிலையில் தற்போது தெக்ரான், பெய்ரூட், ஏமன் ஆகிய பகுதிகளின் மீதும் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. எனவே இனியும் இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு பகுதியின் அமைதிக்கு பாதுகாப்பற்ற தன்மை ஏற்படுவதோடு உலகிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.