இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்று முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் ஆண்டிலியா வீடு. இந்த வீட்டிற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பாண்டம் தீவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வீடு இங்கிலாந்தில் உள்ள பக்கிங் ஹாம் அரண்மனைக்கு பிறகு உலகின் இரண்டாவது விலை உயர்ந்த மற்றும் பெரிய வீடு ஆகும். அதன் பிறகு முகேஷ் அம்பானியின் வீடு மும்பையில் உள்ள அடால்மவுண்ட் சாலையில் 4,532 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வீடு சுமார் 27 மாடிகளை கொண்டுள்ள நிலையில் 600 பணியாளர்கள் வீட்டை பராமரித்து வருகிறார்கள். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வீட்டை ஆஸ்திரேலியாவை சேர்ந்த கட்டுமான நிறுவனமான லெய்டன் ஹோல்டிங்ஸ் வடிவமைத்துள்ளது.‌ ஒரு பிரபல நாளிதழின் கருத்துப்படி அம்பானி குடும்பத்தின் வசிப்பிட செலவு ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 6 ஆயிரம் கோடி முதல் 12,000 கோடி வரை ஆகும். இந்த வீட்டில் சுமார் 9 லிப்ட்டுகள் உள்ள நிலையில், ஒரு தனி பொழுதுபோக்கு இடம், பிரம்மாண்ட நுழைவு வாயில், விசாலமான தங்கும் அறைகள், ஒரு யோகா மையம், ஒரு நடன ஸ்டூடியோ, ஒரு சுகாதார ஸ்பா மற்றும் நீச்சல் குளம் போன்றவைகள் இருக்கிறது. மேலும் ஆடம்பர வசதிகள் கொண்ட முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் பிரம்மாண்ட வீடு அனைவராலும் பேசப்படுகிறது.