போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு இந்தியாவில் மிக பிரபலமான மற்றும் வசதியான சேமிப்புக் கணக்குகளில் ஒன்றாக திகழ்கிறது. போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்சம் (அ) அதிகபட்சமாக தங்களது கணக்கில் ரூ.500 இருப்பு வைத்திருக்கவும். நீங்கள் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்குரிய மிகவும் பாதுகாப்பான வழியாக போஸ்ட் ஆபீஸின் சேமிப்புக் கணக்கு இருக்கிறது. போஸ்ட் ஆபீஸின் சேமிப்புக்கணக்குகள் மூத்தகுடிமக்களுக்கும், நிலையான வருமானம் ஈட்ட விரும்புவோருக்கும் சிறந்த பலனை அளிப்பதாக கூறப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக்கணக்கை திறப்பதற்குரிய வழிமுறைகள்

இந்திய போஸ்ட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிடவும் (அ) அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதையடுத்து தேவையான அனைத்து தகவல்களுடன் படிவத்தை நிரப்பவும். தேவையான ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோவை வழங்கவேண்டும். பின் டெபாசிட் பணம் செலுத்தவேண்டும். இது ரூபாய்.20க்கு குறைவாக இருக்கக் கூடாது. நீங்கள் சேமிப்புக் கணக்கை திறக்க காசோலை புத்தகம் இன்றி குறைந்தபட்சம் ரூபாய்.50 செலுத்தி தபால் அலுவலக சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்.