டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, உலகின் சிறந்த பந்துவீச்சாளர் ரக்ஷித் கான் தான் என்பதில் சந்தேகம் இல்லை. நான் இதை முன்பே கூறியிருக்கிறேன்.

ரக்ஷித் கான் காற்றில் பந்து வீசும் போது அதை சமாளிப்பது மிகவும் கடினம். இதனால் அவருக்கு எதிராக என்ன மாதிரியாக ஷாட்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து நான் தெளிவாக இருக்கிறேன். இதனால் என்னை பொருத்தவரை உலகில் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான். நீங்கள் அவரை ஆதிக்கம் செலுத்த விரும்பினால் அவரை விட ஒரு அடி முன்னால் இருக்க வேண்டும். மேலும் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.