கின்னஸ் உலக சாதனை நிறுவனம் சிலரின் குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் உலகின் குள்ளமான  திருமண ஜோடி தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். அதாவது பிரேசில் நாட்டைச் சேர்ந்த பவ்லா கேப்ரியல் டி சில்வா-கட்யூசியா லி ஹோசினோ ஜோடி சமூக வலைதளம் மூலம் பழகி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதில் பவ்லா 90.28 சென்டிமீட்டர் உயரமும், கட்யூசியா 91.13 சென்டிமீட்டர் உயரமும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள். இவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில் 15 வருடங்களாக பலமுறை சந்தித்து காதலித்து வந்தனர். இவர்களுக்கு முறையே தற்போது 31 மற்றும் 28 வயது ஆகும் நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்கள் உலகின் குள்ளமான திருமண ஜோடி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.