
மத்தியப் பிரதேசம், இந்தோர் மாவட்டம் ஆசாத் நகர் பகுதியில் கடந்த 14ஆம் தேதி காலை நடந்த அதிர்ச்சியான சம்பவத்தில், 30 வயதுடைய தினசரி கூலி தொழிலாளி ஒருவரை, அவரது நண்பர்கள் ஐவர் கம்பிரேசர் மூலம் உடலில் காற்றை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த மொதிராம் என்பவர், இந்தோரில் உள்ள ஒரு பருப்பு ஆலைக்குள் வேலை பார்த்து வந்தார். அவரது நண்பர்கள் ஐந்து பேர் இணைந்து விளையாட்டாக கம்ப்ரஸர் மூலம் தொழிலாளியின் உடலில் காற்றை ஏற்றியுள்ளனர்.
அதன் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட மொதிராமை ஒருவர் மட்டும் ரிக்ஷாவில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அந்த நபர், தொலைபேசியில் பேசுவது போல நடித்து உடனே இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
மருத்துவர்கள் தெரிவித்தபடி, மொதிராமின் உறுப்புகளிலிருந்து இரத்தம் வழிந்தபடியே கொண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவரை காப்பாற்ற முடியாமல் மருத்துவர்கள் மரணம் உறுதி செய்தனர்.
‘இது குறித்து அறிந்த சன்யோகிதாகஞ்ச் போலீசார், சம்பவம் நடைபெற்ற பருப்பு ஆலைக்குச் சென்று மேலதிக விசாரணை மேற்கொண்டனர். மேலாளர் தீராஜ் லொவன்ஷி கூறுகையில், இது நண்பர்கள் விளையாட்டாக கம்பிரேசர் மூலம் உடலுக்குள் காற்றை ஏற்றி விட்டதாக தெரிவித்தார்.
ஆனால் இந்த பகுதி பசுமை வலை கம்பியால் மூடப்பட்டதால், சிசிடிவி காட்சிகளில் எதுவும் பதிவாகவில்லை. தற்போது DVR வங்கி பரிசோதனைக்காக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலாளர் தீராஜ், தப்பியோடிய நபரை அடையாளம் கண்டு, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.