மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கியுள்ள ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தில், சிவானி என்ற இளம்பெண் அவரது சொந்த பெரியப்பா மகனாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், சிவானியின் தலையை துண்டித்து உடலில் இருந்து பிரித்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான். இந்தக் கொலையை மறைப்பதற்காகவும், ஆதாரங்களை அழிப்பதற்காகவும் சிவானியின் உடலை அந்த இளைஞன் தீயிட்டு எரித்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். இரத்த உறவுக்குள் நடந்த இந்த கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக சீரழிவை சுட்டிக்காட்டும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.
