மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ள சேலு நகரில் செவ்வாய்க்கிழமை ஒரு துயரமான சாலை விபத்து ஏற்பட்டது. டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பள்ளி மாணவர்கள் மீது, கட்டுப்பாடில்லாமல் வேகமாக வந்த ஒரு கார் மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் படுகாயமடைந்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த முழுச் சம்பவமும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. விபத்துக்குப் பிறகு கார் ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். விபத்து நடந்த உடனேயே, உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து காயமடைந்த நான்கு மாணவர்களையும் மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
#Wardha, MH 🚨⚠️
Disturbing Visuals 🚨
Driving needs Disciplines…⚠️
1. #Footpath not accessible for pedestrians, completely encroached.
2. School Kids walking on the road + Cycling ⚠️
3. Car Driver need to work on #RoadDisciplines.
4. Driver L-Board/Distracted? 🚨… pic.twitter.com/WXkhaikgNv— Dave (Road Safety: City & Highways) (@motordave2) December 16, 2025
“>
சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பள்ளி மற்றும் கல்விப் பகுதிகளுக்கு அருகில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
