திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல் நிலைய இன்ஸ்பெக்டரை விசிக கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஒருமையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவரை விசிக கட்சியினர் காரில் ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையினரை பார்த்து மிகவும் மோசமான வார்த்தைகளால் கோஷம் எழுப்பி கொண்டே சென்றனர். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அதில் காவல்துறையினரின் மாண்பை குறைக்கும் வகையில் அவர்களைப் பார்த்து காவல் நாய்களே மற்றும் எச்சைப் பிளப்பு போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது காக்கி சட்டைக்கு கலங்கம் விளைவிக்கும் செயல்.

ஒரு சில காவலர்கள் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த காவல்துறையினரையும் இழிவாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தங்களுடைய உயிரை துச்சமாக கருதி மக்களை காக்கும் காவல்துறையினரை அரசியல் காரணங்களுக்காக இப்படி அவதூறாக பேசுவது கண்டனத்திற்குரியது. மேலும் காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பும் கூட்டணி கட்சியினர் மீது காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.