பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் மாதம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டியிடுவதாகவும் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் என்றும் காயத்ரி ரகுராம் தொடர்ந்து சவால் விட்டு வருகிறார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் மீண்டும் அண்ணாமலையை சீண்டி ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார்.

அதாவது தன்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் காயத்ரி தெரிவித்துள்ளார். மேலும் காயத்ரி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் அண்ணாமலையின் வார் ரூம் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுக்கு மார்பிங் செய்வது எப்படி என்று அண்ணாமலை கற்றுக் கொடுப்பது போல் தோன்றுகிறது. அண்ணாமலையின் தலைமை பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கும் இந்தியாவில் உள்ள பெண்களுக்கும் மிக ஆபத்தானது என்று பதிவிட்டுள்ளார்.