பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டு உபயோகப் பொருட்களான தண்ணீர் குழாய்கள், ஷவர் மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளை விசித்திரமான முறையில் பொருத்திக்கொண்டு சாலையில் வலம் வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இந்நிலையில் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கும் இந்த ‘புதுமை’ பைக், காண்போரைச் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், “எதற்காக இப்படி ஒரு அலங்காரம்?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர் தனது பைக்கை ஒரு நடமாடும் பிளம்பிங் கடை போல மாற்றியுள்ளார்.
View this post on Instagram
“>
இதனால் வண்டியின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் வரிசையாக குழாய்கள் மற்றும் குச்சிகளை அடுக்கி வைத்திருப்பது பார்ப்பதற்கு ஏதோ ஒரு கலைப்படைப்பு போல காட்சியளிக்கிறது. இந்த வேடிக்கையான முயற்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்ன புதுவிதமான டிசைன்?” என்றும், “பாகிஸ்தானின் அடுத்தக்கட்ட தொழில்நுட்பம் இதுதான்” என்றும் கிண்டலாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
