பழைய கார் வாங்கச் சென்ற ஒரு நபருக்கு, தனது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சில வாரங்களுக்கு முன்பு அந்த நபரின் கார் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், மீண்டும் ஒரு கார் வாங்கத் திட்டமிட்டு இணையதளம் மூலம் தேடியுள்ளார்.
அப்போது அவருக்குப் பிடித்தமான ஒரு கார் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் வர, அதைப் பார்க்கச் சென்றுள்ளார். நேரில் சென்று காரைப் பார்த்தபோதுதான் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது; விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த கார், சில வாரங்களுக்கு முன்பு அவரிடமிருந்து திருடப்பட்ட அதே கார் என்பது தெரியவந்தது.
Holy Crap. Wild story!!!
Man shows up to buy a used car only to discover it was his car that was stolen weeks earlier.
pic.twitter.com/LQQPjPZ0rP— Juanita Broaddrick (@atensnut) February 11, 2026
“>
சுதாரித்துக் கொண்ட அவர், திருடர்களுக்குச் சந்தேகம் வராதபடி பேசிவிட்டு, ஓடி பார்க்க வேண்டும் என கூறி காரில் ஏறியதும் காரை எடுத்து தப்பிச்சென்று விட்டார். “விதி யாரை எங்கே கொண்டு வந்து நிறுத்தும் என்று தெரியாது” என்பதற்குச் சாட்சியாக இந்தச் சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
