கொல்கத்தா ரூபி பொது மருத்துவமனையில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்தப் பெண்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனைக்கு வந்த பெண்கள் அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது, ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் கேமராவைக் கண்டு உறைந்து போயினர்.

உடனடியாக அவர்கள் கூச்சலிடவே, அங்கிருந்த ஒரு மருத்துவமனை ஊழியர் அந்த போனை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றார். ஆனால், அங்கிருந்த மக்கள் அவரை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் இடமாக கருதப்படும் மருத்துவமனையிலேயே இப்படி ஒரு ஆபாச வீடியோ விவகாரம் நடந்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by NewsX (@newsxofficial)

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னதாக எத்தனை பேரை இதுபோல படம்பிடித்தார்,

அந்த வீடியோக்கள் எங்கேனும் பகிரப்பட்டதா எனப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைக்காது என்ற தைரியமே இதுபோன்ற இழிவான செயல்களுக்குக் காரணம்” எனப் பொதுமக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.