கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இசைவாணன் என்ற மகனும், இனியவள் என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரமேஷை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.