இன்றைய காலகட்டத்தில் பலர் தங்களின் பாதுகாப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு இடைப்பட்ட இணைக்கும் பகுதியில் (Coupler area) ஒரு நபர் மிகவும் சாதாரணமாக நின்று கொண்டிருக்கிறார்.

அந்த இடத்திலிருந்து அவர் கீழே விழுந்தால் ரயிலின் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் மிக அதிகம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர் அந்த இடத்தில் நின்று கொண்டு புகையிலையைத் தயார் செய்து வாயில் போட்டுக் கொள்கிறார்.

லைக்குகளுக்காகவோ அல்லது புகையிலை மீதான மோகத்தினாலோ அவர் செய்த இந்த விபரீதச் செயல் காண்போரை நடுங்க வைத்துள்ளது. ரயில்வே விதிகளின்படி இது போன்ற செயல்கள் தண்டனைக்குரியவை என்பது குறிப்பிடத்தக்கது.