நேபாள நாட்டில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 270 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுப் போலிஸ் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திடீரெனப் பொங்கி எழுந்த வெள்ள நீரில் கரையோரக் கிராமங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் மிக அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த மீட்ப்பு நடவடிக்கைகளுக்காகத் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் சிறப்பு மீட்புக் குழுவினர் தொடர்ந்து களத்தில் இறக்கப்பட்டுப் பணியாற்றி வருகின்றனர்.
வெள்ள பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளில் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீனக் கருவிகளின் உதவியோடு இரவு பகலாக மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் புதைந்திருக்கக் கூடும் என்பதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இயற்கையின் இந்த அதிரடிச் சீற்றத்தால் 270 பேரின் உயிர்கள் பலியாகி, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் இருப்பிடங்களை இழந்து தவித்து வரும் இந்தச் சம்பவம் அகில உலகையே உலுக்கியுள்ளது.
