இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் அது உன்னதமான உணர்வு என்பதை தற்போது வெளியாகி உள்ள வீடியோ உணர்த்துகிறது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாய் ஒன்று பிரசவத்தில் குட்டியை ஈன்று உள்ளது.

ஆனால் குட்டி இறந்தது போல தெரிந்த நிலையில் மிகவும் சோகமாக மாறி உள்ளது. ஆனால் குட்டியின் உடலை வருடிய தருணத்தில் மீண்டும் குட்டி துள்ளி குதித்தது. இதனைக் கண்டு குட்டி உயிருடன் இருக்கிறது என்பதை உணர்ந்த அந்த நீர்நாய் தனது அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.