சென்னை மாவட்டத்தில் உள்ள திருவிக நகரில் கணவரை பிரிந்து 54 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூலில் அந்த பெண்ணுக்கு சிவா என்ற நபர் அறிமுகமானார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிவா அந்த பெண்ணை நேரில் பார்க்க ஆசைப்பட்டு அவரது வீட்டிற்கு வந்தார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதன் பிறகு அந்தப் பெண் குளிப்பதற்காக தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி மேஜையில் வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது செயின், மோதிரம், வளையல் என எட்டு பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஹாலில் அமர்ந்திருந்த சிவாவையும் காணவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவாவின் ஃபேஸ்புக் கணக்குகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.